உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சாவுடன் ஒடிசா நபர் சிக்கினார்

கஞ்சாவுடன் ஒடிசா நபர் சிக்கினார்

அடையாறு, அடையாறு பேருந்து நிலையம் அருகில், சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த நபரை, அடையாறு ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர்.அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.அவரிடம் விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகபன்ந்து பெஹரா, 30, என தெரிந்தது. சென்னையில் கட்டுமான பணி செய்து வரும் அவர், அடிக்கடி ஒடிசா சென்று, அங்கிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை