அலுவலகம் சீரமைப்பு
கோயம்பேடு சந்தையை, சி.எம்.டி.ஏ.,வின் அங்காடி நிர்வாக குழு எனும் எம்.எம்.சி., நிர்வகிக்கிறது. சந்தையின் 'ஈ' சாலையில் உள்ள இதன் அலுவலகம் 1996ல் கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்து, மழைக்காலத்தில் சுவரில் தண்ணீர் கசிந்து வந்தது. இதையடுத்து 75 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. முதல் தளத்தில் அலுவலகம், இரண்டாம் தளத்தில் கூட்ட அரங்கம் மற்றும் லிப்ட் அமைக்கும் பணி நடக்கிறது.