உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் லாரிகளுக்கு தடை நீக்கம் அதிகாரிகள் ஆலோசனை

குடிநீர் லாரிகளுக்கு தடை நீக்கம் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை, பெரம்பூர் வீனஸ் அருகே, குடிநீர் லாரி மோதி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து, சென்னையில், 'பீக் ஹவர்ஸ்'களில், குடிநீர், கழிவு நீர் லாரி உட்பட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த தடை உத்தரவை மீறி சுற்றிதிரிந்த, 289 கனரக வாகங்களுக்கு, போக்குவரத்து போலீசார் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.இதனால், அரசு மருத்துவமனைகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் வினய் மற்றும் அதிகாரிகள், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயனிடம் நேற்று பேச்சு நடத்தினர்.குடிநீர் லாரிகளுக்கான தடையில் விலக்கு வேண்டும்; காலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை குடிநீர் வினியோகத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மாலை நேரங்களில், பள்ளிகள் அமைந்துள்ள சாலையை தவிர்த்து மாற்று சாலைகளில் குடிநீர் லாரிகள் பயன்படுத்துமாறு, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ