உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓபன் பிடே ரேட்டிங் செஸ் வரும் 18ல் துவக்கம்

ஓபன் பிடே ரேட்டிங் செஸ் வரும் 18ல் துவக்கம்

சென்னை மாநில செஸ் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் சார்பில், 23வது மாநில ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டிகள், 18ம் தேதி துவங்குகின்றன.போட்டிகள், மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லுாரியில் நடக்கின்றன. இதில், 25 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கும் பொதுவாகவும், 9, 11, 13, 15, 17 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், தனித்தனியாகவும் போட்டிகள் நடக்கின்றன.வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்க விரும்புவோர், 72001 01544, 99405 67200 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை