ரூ.2.57 கோடியில் கட்டடங்கள் திறப்பு
பூந்தமல்லி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருநின்றவூர், பெருமாள்பட்டு ஆகிய பகுதிகளில், 2.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 5 மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா, பாரிவாக்கத்தில் நேற்று நடந்தது.கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் நாசர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.