உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவிக்கு ஹால் டிக்கெட் தர உத்தரவு

மாணவிக்கு ஹால் டிக்கெட் தர உத்தரவு

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த 21 வயது மாணவி லோகேஸ்வரி, குருநானக் கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரம் பயில்கிறார். அரசு கட்டணத்தைவிட, கல்லுாரி நிர்வாகம் அதிகம் வசூலிப்பதாக, மாணவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், 5வது செமஸ்டர் தேர்வை எழுத, மாணவிக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை. இதனால் அவர், கல்லுாரியில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.இதையடுத்து அவர், தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்க உத்தரவிட வேண்டும் என, நீதிமன்றத்தில் மனு அளித்தார்.மனு, நீதிபதி பட்டு தேவானந்த் முன், விசாரணைக்கு வந்தது. தேர்வு எழுத மனுதாரரை அனுமதிக்கவில்லை என்றால், அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், ஹால் டிக்கெட் வழங்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை