உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாரிகள் அலட்சியத்தால் முளைவிட்டு வீணாகும் நெல்

அதிகாரிகள் அலட்சியத்தால் முளைவிட்டு வீணாகும் நெல்

ஆவடி: அதிகாரிகள் கொள்முதல் செய்யாததால், சாலைகளில் குவித்து வைத்துள்ள நெல் முளைவிடுவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆவடி, பாலவேடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதலுக்காக, பாலவேடு ஊராட்சியில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து, 15,000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்து கிடங்கில் தேக்கி வைத்துள்ளனர். அவற்றை அரவை ஆலைகளுக்கு அனுப்பாததால், தேக்கி வைக்க இடமின்றி, கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதலை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். அரசு கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, பாலவேடு சுங்கச்சாவடி ஒட்டிய அணுகு சாலைகளில் குவித்து பாதுகாத்து வருகின்றனர். சமீபத்திய மழையால், முளைவிட துவங்கியுள்ளது. இந்த பகுதியில் மட்டும், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் நாசமாகி வருகிறது. இதனால், அறுவடை செய்த நெல்லை பணமாக்க முடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை