உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெயின்ட் டப்பா வெடித்து முதியவருக்கு தீக்காயம்

 பெயின்ட் டப்பா வெடித்து முதியவருக்கு தீக்காயம்

கீழ்க்கட்டளை: வேளச்சேரி அடுத்த கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் வரதராஜன், 72. இவர், அதே பகுதியில், ஈஸ்வரன் நகர் 1வது பிரதான சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, தனது வீட்டின் பின்புறமுள்ள குப்பையை கூட்டி, அதில் தேவையற்ற பொருட்களையும் சேர்த்து எரித்தார். அப்போது, அதிலிருந்த ஒரு பொருள் வெடித்து, அவர் மீது தீப்பற்றியது. அதில், அவருக்கு முகம், கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து, அவரின் குடும்பத்தார் தீயை அணைத்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை அளித்த தகவலின்படி, பள்ளிக்கரணை போலீசார் விசாரித்ததில், வெடித்தது 'பெயின்ட் டப்பா' என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை