உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பணியின்போது தவறி விழுந்த பெயின்டர் பலி

 பணியின்போது தவறி விழுந்த பெயின்டர் பலி

பெரம்பூர்: : பெரம்பூர் முகமதியன் தெருவைச் சேர்ந்தவர் ஷமீம், 45, பெயின்டர். இவர், புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் 4வது தெருவில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டின் 2வது மாடியில் இருந்து கயிற்றில் தொங்கியபடி வெளிசுவரில் வர்ணம் பூசும் போது, தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அவரது மனைவியிடம் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை