வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த நடவடிக்கைகள் தொடருமானால் நல்லது இல்லையேல் தரக்குறைபாடு நிச்சயம்
சென்னை : புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் மேற்கொள்ளும் ஆன்மிக பயணத்தை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் கூறியதாவது:
கோவில்களுக்கு தேவையான நெய், ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என, அனைத்து கோவில்களுக்கும், 2021ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பழனி கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த சிலர், சமூக வலைதளங்களில் விஷம பிரசாரம் செய்தது குறித்து, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பழனி கோவில் பஞ்சாமிர்தம், கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் குறித்து, உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றின் தரத்தை உறுதிபடுத்தி, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம், 523 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அறநிலைய துறை செயலர் சந்தரமோகன், அறநிலையத் துறை கமிஷனர் ஸ்ரீதர் பங்கேற்றனர்.
இந்த நடவடிக்கைகள் தொடருமானால் நல்லது இல்லையேல் தரக்குறைபாடு நிச்சயம்