கோயம்பேடு சந்தையில் பீதி
கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில், இரவு வேளைகளில் மூன்று இளைஞர்கள், கையில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரியும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி, வியாபாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.அவர்கள், வியாபாரி மற்றும் கூலித்தொழிலாளிகளிடம் மொபைல் போன் பறிப்பு, அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட கடைகளில் மொபைல் போன் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். யாரேனும் தடுத்தால், மறைத்து வைத்திருக்கும் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டியும் வெட்டியும் தப்பி விடுவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே, போலீசார் சந்தையில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.