உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 15 அடி ஆழம், 10 அடி அகலம் திடீர் பள்ளத்தால் மதுரவாயலில் பீதி

15 அடி ஆழம், 10 அடி அகலம் திடீர் பள்ளத்தால் மதுரவாயலில் பீதி

மதுரவாயல், வளசரவாக்கம் மண்டலம், 147வது வார்டு, மதுரவாயலில் பல்லவன் நகர் இரண்டாவது பிரதான சாலை அமைந்துள்ளது. இது, ஆலப்பாக்கம் பிரதான சாலையை பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது.இச்சாலையில் மாநகராட்சி பூங்கா அருகே, குடிநீர் வாரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.இந்நிலையில், மாநகராட்சி பூங்கா அருகே 10 அடி ஆழம், 15 அடி அகலத்திற்கு நேற்று முன்தினம் இரவு ராட்சத பள்ளம் ஏற்பட்டது.இதனால், மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்து, பல்லவன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பல்லவன் நகரில் ஏற்பட்ட குழாய் உடைப்பு இரு நாட்களில் சரிசெய்யப்படும். மேல்நிலை தொட்டியில் குடிநீர் முழுதாக இருந்ததால், வினியோகத்தில் சிக்கல் ஏற்படவில்லை. தேவைப்பட்டால் லாரி குடிநீர் வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ