உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அவதுாறு பேச்சுக்கு மன்னிப்பு சீமானிடம் பபாசி வலியுறுத்தல்

அவதுாறு பேச்சுக்கு மன்னிப்பு சீமானிடம் பபாசி வலியுறுத்தல்

சென்னை, சென்னை புத்தகக்காட்சியில் கடந்த 5ம் தேதி, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதில், வேறு பாடல் ஒலிபரப்பப்பட்டது.மேலும், புத்தகக்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பாதை குறித்தும் விமர்சித்தார்.இதற்கு, சென்னை புத்தகக்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான 'பபாசி' கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அதன் செயலர் முருகன், சீமான் பேசியதற்கும், 'பபாசி' அமைப்புக்கும் சம்பந்தமில்லை என்றும், புத்தகத்தை வெளியிட்ட டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்திடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், 'பபாசி'யின் தலைவர் சேது சொக்கலிங்கம், நேற்று அளித்த பேட்டி: பபாசியின் உறுப்பினர் என்ற முறையில், புத்தகம் அறிமுகம் செய்ய ஒரு அரங்கு ஒதுக்கப்பட்டது. புத்தகத்தை நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட அழைக்கப்பட்டிருந்த நிலையில், நான், 'பபாசி'யின் தலைவர் என்ற முறையில், முதல் பிரதியை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.இது, வழக்கமான நடைமுறை. நான் மேடை ஏறும் முன், சீமானிடம், 'இது அரசியல் மேடை அல்ல; இலக்கிய மேடை. இங்கு, அனைத்து கட்சியினரும் வந்து பேசி செல்கின்றனர்.'அவர்கள், அரசியல் பேசுவதில்லை. இலக்கியம் சார்ந்தும், புத்தக வாசிப்பு சார்ந்தும் தான் பேசுகின்றனர். அதனால், நீங்களும் அரசியல் பேச வேண்டாம்' என கூறினேன்.மேடையில், பேசத்துவங்கிய சீமான், முதலில் நுாலைப்பற்றி தான் பேசினார். பின், மேடையை தனதாக்கி, நேரடியாக அரசியல் பேசத்துவங்கி, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்டார்.இதற்கு 'பபாசி' வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது. இதை நடத்திய பதிப்பகமும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானும் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை