மேலும் செய்திகள்
ரோந்தில் பிடிபட்ட ரூ.50 லட்சம் ஒப்படைப்பு
18-Oct-2025
சென்னை: அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி, 35. இவர், நேற்று குடும்பத்துடன் வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சிக்காக, அசோக் நகரில் இருந்து ஆட்டோவில் சென்றார். அப்போது, அவர் பையில் எடுத்துச் சென்ற, 1.50 லட்சம் ரூபாயை மறந்துவிட்டுள்ளார். இது குறித்து, வேப்பேரி போலீசாரிடம் தெரிவித்தனர். வேப்பேரி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆட்டோ எண்ணை வைத்து, அதன் உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு பேசி பணத்தை மீட்டனர். இதையடுத்து, பணப்பையை தேன்மொழியை அழைத்து ஒப்படைத்தனர்.
18-Oct-2025