லண்டன் விமானம் ரத்து பயணியர் வாக்குவாதம்
சென்னை,சென்னையில் இருந்து லண்டன் செல்லும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், 220 பயணியருடன் நேற்று அதிகாலை 5:35 மணிக்கு புறப்பட தயாரானது.விமானம் இயக்க தயாராக உள்ளதா என சோதனை செய்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொறியாளர்கள் குழு, இயந்திர கோளாறு சரி செய்யும் பணியில் இறங்கினர்.காலை 8:00 மணி ஆகியும் கோளாறு சரி செய்யப்படவில்லை. பயணியர் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணியர் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.விமானம் பழுது பார்க்கப்பட்டு நாளை வழக்கமான நேரத்தில் புறப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.கடும் அதிருப்திசென்னை விமான நிலையத்தில், பல்வேறு விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படாமல் ரத்தவது தொடர் கதையாகி வருகிறது. இவை பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.