உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட்டில் துாங்கும் ஓய்வறை அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு

ஏர்போர்ட்டில் துாங்கும் ஓய்வறை அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு

சென்னை, விமான பயணியர், சில இடங்களுக்கு நேரடியாகவும், மாறி செல்லும் முறையிலும் பயணிப்பர். இப்படி விமானத்தில் வரும் பயணியர், இடை நிலையமாக ஒரு விமான நிலையத்தில் தற்காலிகமாக இருக்க நேரிடலாம்.இது போன்ற நேரங்களில் ஓய்வெடுக்க பெரிதாக எந்த வசதியும் இருக்காது. அதனால், 'ஸ்லீப்பிங் பாட்ஸ்' என்ற தற்காலிக தனி ஓய்வறை வசதி, மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.இதில், மொபைல் சார்ஜிங் போர்டுகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்; பயனியரும், பாதுகாப்பாக ஓய்வெடுக்க முடியும்.சென்னை விமான நிலையத்தில் இந்த வசதி, 2022ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. பயணியருக்கு மிக பயனுள்ளதாக இருந்தது.இந்த சேவை தற்காலிகமாக கொண்டு வரப்பட்டதால் தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே, சென்னை விமான நிலையத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பயணியர் சிலர் கூறியதாவது:பொதுவாக, விமான நிலையங்களில் ஓய்வெடுக்கும் வகையில், புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளில், லவுஞ்சு வசதி உள்ளது. ஆனால், சவுகரியமாக ஓய்வெடுக்க முடியாது.இதுவே 'ஸ்லீப்பிங் பாட்ஸ்' இருந்தால் பாதுகாப்பாக ஓய்வெடுக்கலாம். இந்த சேவையை மீண்டும் வழங்க, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை