உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடி தடத்தில் 18 மின்சர ரயில்கள் திடீர் ரத்தால் பயணியர் அதிருப்தி

கும்மிடி தடத்தில் 18 மின்சர ரயில்கள் திடீர் ரத்தால் பயணியர் அதிருப்தி

சென்னை, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் நேற்று, திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில் நேற்று 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, நேற்று காலையில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், சென்ட்ரல் - எண்ணுார், மீஞ்சூர் வரையில், 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.இந்த திடீர் அறிவிப்பால், சென்ட்ரல், கொருக்கப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ரயில் நிலையங்களில், பயணியர் மின்சார ரயிலுக்காக காத்திருந்து அவதிப்பட்டனர்.இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:ரயில் பாதை பராமரிப்பு பணி, திட்டமிட்டு நடப்பது தான். ஆனால், காலை 9:00 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டு, அடுத்த இரண்டு மணி நேரத்தில், மின்சார ரயில்கள் ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம்.இதனால், மின்சார ரயில்களுக்காக ஒரு மணி நேரம் வரை காத்திருந்து, பயணியர் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை