உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தரமற்ற இட்லி குப்பையில் கொட்டிய நோயாளிகள்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தரமற்ற இட்லி குப்பையில் கொட்டிய நோயாளிகள்

ராயபுரம்: அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் வினியோகம் செய்த இட்லிகள் தரமற்று இருந்ததால், அவற்றை நோயாளிகள் குப்பை தொட்டியில் கொட்டினர். ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எதிரில் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இங்கு, காய்ச்சல், சுவாச கோளாறு, சளி, இருமல்; வாந்தி, பேதி என பல்வேறு உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப் படுகின்றனர். இவர்களுக்கு, இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்க்கு நேற்று மாலை இட்லி வழங்கப்பட்டது. அவை கெட்டுபோய் நுால் நுாலாக வருவதாக கூறி, குப்பை தொட்டியில் நோயாளிகள், உதவி யாளர்கள் கொட்டினர். மருத்துவமனை நிர்வாகத்திடமும் நோயாளிகள் புகார் அளித்தனர். கெட்டுப்போன இட்லி வினியோகம் குறித்து, இன்று விசாரணை நடத்தப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி