புகார் பெட்டி உடைந்த மேன்ஹோல் பாதசாரிகள் அவதி
உடைந்த ' மேன்ஹோல் ' பாதசாரிகள் அவதி
பெருங்குடி மண்டலம், வார்டு 187க்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில், பிரதான வழித்தடமாக உள்ள சபரி சாலையில், அதிக போக்குவரத்து எப்போதும் உண்டு. இதனால், பாதசாரிகள், நடை மேடைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.சபரி சாலையில், காவேரி பேன்சி கடை அருகே, ஒரு 'மேன் ஹோல்' பல மாதங்களாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால், பாதசாரிகள் கால் இடறி, கீழே விழுந்து, காயமடைகின்றனர். உடைந்த 'மேன் ஹோல்' அகற்றப்பட்டு, புதிய 'மேன் ஹோல்' பொருத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சீனி.சேதுராமன், 62, மடிப்பாக்கம்