கொசு உற்பத்தி நிறுவனத்திற்கு அபராதம்
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், வார்டு 53ல் வி.ஜி.என்., மார்பல் ஆர்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது.இந்த இடத்தில், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, 16 இடங்களில், கொசு புழு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டது.மேலும், கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் 45 பேரில் இருவருக்கு காயச்சல் இருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, கொசு புழு உற்பத்திக்கு காரணமான அந்நிறுவனத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், கொசு புழு உற்பத்தி தடங்களை, 24 மணி நேரத்தில் அழிக்க வேண்டும் எனவும், அந்நிறுவனத்திற்கு மாநகராட்சி சுகாதார துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.