நவ., 28ல் ஓய்வூதியம் குறைதீர் கூட்டம்
சென்னை, சென்னையில், அரசு ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம், நவ., 28ம் தேதி நடக்கிறது.சென்னை மாவட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம், நவ., 28ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், எட்டாவது தளத்திலுள்ள கூட்டரங்கில் நடக்கிறது. ஓய்வூதியம் பெறுவதில் எதேனும் குறைகள் இருந்தால், வரும் 15ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக அளிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.