உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவில் மின் வெட்டு மக்கள் சாலை மறியல்

இரவில் மின் வெட்டு மக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கு ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர், முல்லை நகர், சக்தி கணபதி நகர், சிவசக்தி நகர், அம்பேத்கர் நகர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிகளில், சில நாட்களாக அடிக்கடி இரவு வேளைகளில் மின்சாரம் தடைபடுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதை கண்டித்து, சத்திய மூர்த்தி நகர் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், பகுதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணுார் உதவி கமினுஷர் வீரக்குமார் பொதுமக்களிடம், மின் வாரிய அதிகாரிகளிடம் பேசி மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.பல மணி நேர போராட்டத்திற்கு பின், மின் வாரிய அதிகாரிகள் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, இணைப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ