உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு டார்ச்சர் பெரவள்ளூர் ரவுடி கைது

பெண்ணுக்கு டார்ச்சர் பெரவள்ளூர் ரவுடி கைது

கொளத்துார் :கொளத்துாரைச் சேர்ந்த 31 வயது பெண் கணவருடன் தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு, வியாபாரம் முடித்து பாத்திரம் கழுவி கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முபஷீர் அகமது, 23, உள்ளிட்ட நான்கு பேர், அப்பெண்ணிடம் கிண்டலடித்து, வம்பிழுத்து சென்றுள்ளனர்.இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அப்பெண் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தபோது, முபஷீர் அகமது கூட்டாளிகளுடன் வந்து, ஆபாச செய்கை காண்பித்து கிண்டல் செய்துள்ளார்.இது குறித்து அப்பெண், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், முபஷீர் அகமதுவை, நேற்று கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை, மூன்று கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. தலைமறைவான அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி