உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம்

3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம்

கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம், காந்தி நகர் 19வது தெருவைச் சேர்ந்தவர் வினோத், 32. இவரது தம்பி கார்த்திக், 30. இவர்கள் வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள். இவர்களின் வீடு போலீஸ் பூத்தில் இருந்து சிறிது துாரத்தில் உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூவர், வினோத் வீடு மீது, பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர்.சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த திரை துணி, தீப்பிடித்து எரிந்தது. அதனருகே படுத்திருந்த வினோத் மகன் பிரதீப்பிற்கு, 11, வலது கை மணிக்கட்டில் தீ காயம் ஏற்பட்டது.இதேபோல் கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்த பெயின்டர் நித்தியானந்தன் மற்றும் பெரியார் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் நித்தியானந்தனின் வீட்டு முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.மூன்று பேரின் வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவங்கள் குறித்து, மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.ஒரு வாரத்திற்கு முன் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பழி வாங்கும் நிகழ்வாக, நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா; மூன்று வீட்டின் மீதும் ஒரே கும்பல் தான் பெட்ரோல் குண்டு வீசினரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை