ஜூஸ் கடையில் போன் திருட்டு
அண்ணா நகர்:அண்ணா நகர், ஏ.ஜி.பிளாக் ரிவர் காலனியில் ஜூஸ் மற்றும் லஸ்சி கடை நடத்தி வருபவர், இம்ரான் அஹ்மத், 35. இவரது கடையில், வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை பூட்டி சென்றுள்ளனர்.நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த 5,000 ரூபாய் மற்றும் இரு மொபைல் போன்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.