உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை தடுப்பில் மோதி பிங்க் ஆட்டோ விபத்து

சாலை தடுப்பில் மோதி பிங்க் ஆட்டோ விபத்து

சென்னை, அண்ணாசாலை, பதன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செம்பருத்தி, 33 ; பெண்கள் பயணிக்கும், 'பிங்க்' ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, அண்ணா மேம்பாலம் அருகே, அப்துல், 30 என்ற பயணியை ஏற்றிக் கொண்டு கத்தீட்ரல் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை நோக்கி ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.கத்தீட்ரல் சாலையில் இருந்து கஸ்துாரி ரங்கன் சாலைக்கு வலது புறம் திரும்ப முயன்றபோது, சாலையில் பள்ளம் இருப்பதை பார்த்து, சட்டென்று திருப்பியதால், கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி, ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் பயணியை ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.சம்பவம் குறித்து ராயப்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !