உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் வெள்ளப்பெருக்குக்கு தீர்வு காண திட்டம்; ரூ.5.24 கோடி ஒதுக்கீடு

வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் வெள்ளப்பெருக்குக்கு தீர்வு காண திட்டம்; ரூ.5.24 கோடி ஒதுக்கீடு

சென்னை: 'வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் வெள்ளப்பெருக்குக்கு தீர்வு காண மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.5.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bmqnxjv9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை மாநகரில், வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தண்ணீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதாவது, 2.78 கி.மீ., நீளமுள்ள வீராங்கல் ஓடையின் தடுப்புச்சுவரை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்கு ரூ.5.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஓடையில், 654 கனஅடி நீர் செல்ல முடியும்.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து 1.7 கி.மீ தூரத்திற்கு தடுப்புச்சுவரை உயர்த்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில், 250 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், அடிக்கடி கசிவு மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. சாலையோரத்தில் 300 மீட்டர் உயரத்தில் சுவர் கட்ட திட்டமிட்டுள்ளோம். வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன், தொடர் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பணிகள் முடிக்கப்படும். நீரின் அளவை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு இடங்களில் ஷட்டர்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.அடையாறு மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: கால்வாய் நிரம்பியதால், மடிப்பாக்கம் ராம் நகர் போன்ற பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. வீராங்கல் ஓடையில் சுவர் எழுப்புவது அவசியம். இது சீனிவாசன் நகர், குபேரன் நகர், ஏ.ஜி.எஸ்., காலனி மற்றும் கல்கி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உதவும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி