உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயிலுடன் பிற போக்குவரத்து வசதியும் சேர்க்க திட்டம்

ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயிலுடன் பிற போக்குவரத்து வசதியும் சேர்க்க திட்டம்

சென்னை:விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்துடன் விரைவில் அனுப்ப உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்தில், விமான நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் இருந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, சிறு திருத்தத்துடன் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய அரசின் ஒப்புதல் பெற கடந்த மே மாதம் அனுப்பப்பட்டது.இதற்கிடையே, இந்த விரிவான திட்ட அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையின் முக்கியஇணைப்பாக இருக்கும்,விமான நிலையம் - கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 45 - 19 அடி உயரத்தில் நெடுஞ்சாலையின் மேம்பால சாலையும், 59 - 65 அடி உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதையும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.இதற்கிடையே, இந்த திட்டத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்துடன் இணைத்து அனுப்ப, மத்திய அரசு அறிவுறுத்தியது.இதற்கான, தகவல்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் பெற்றுள்ளோம். எனவே, இந்த அறிக்கையை இணைத்து, மத்திய அரசுக்கு விரைவில் அனுப்ப உள்ளோம்.மக்கள் தொகை, வாகனங்கள் பெருக்கம், போக்குவரத்து நெரிசல், தொலைநோக்கு போக்குவரத்து திட்டமிடல் உள்ளிட்ட விபரங்கள், இதில் இடம் பெறும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்தகட்ட பணிகள் துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி