உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுப்பு எடுக்காதீங்க ப்ளீஸ்...!

விடுப்பு எடுக்காதீங்க ப்ளீஸ்...!

சென்னை, தீபாவளியின்போது விடுப்பு எடுக்காமல் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு வருமாறு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை:வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொருட்கள் வாங்குவதற்கும், வெளியூர் செல்வதற்கும் அதிக எண்ணிக்கையிலான பயணியர் பேருந்துகளில் பயணிப்பர்.எனவே, வரும் நவ., 3ம் தேதி வரை பொதுமக்கள் நலன் கருதி, பஸ் நடத்துனர், ஓட்டுனர் விடுப்பு எடுப்பதை தவிர்த்து குறித்த நேரத்தில் தவறாது பணிக்கு வந்தும், தேவைக்கேற்ப கூடுதல் பணி செய்தும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளையும் இயக்க ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை