உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவருக்கு போக்சோ

முதியவருக்கு போக்சோ

வியாசர்பாடி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று தன் வீட்டின் மாடியில் மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் வந்த, பக்கத்து வீட்டில் வசிக்கும் 61 வயது முதியவர் ஜெயராம், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரை அடுத்து, செம்பியம் மகளிர் போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, ஜெயராமை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை