உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார்

தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார்

சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், இவர், கோயம்பேடு துணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:கடந்த, 18ம் தேதி, மதுரவாயல் தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவது தொடர்பாக, ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. அதில், எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்தியநாதன் கோரிக்கை மனு அளித்தார்.இதை சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில் பதிவு செய்து இருந்தேன். இதை பார்த்து, எங்கள் பகுதியின் 145வது, தி.மு.க., வட்ட துணைச் செயலர் ஏழுமலை, கவுன்சிலர் சத்தியநாதன் குறித்தும் என்னை பற்றியும் மிகவும் கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையில், பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இந்த பதிவுகளை நீக்கி, ஏழுமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி