உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி போலீஸ் - கஸ்டம்ஸ் அணிகள் டிரா

சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி போலீஸ் - கஸ்டம்ஸ் அணிகள் டிரா

சென்னை, சென்னை கால்பந்து அமைப்பின் சார்பில், சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி, சென்னை கஸ்டம்ஸ் அணியை எதிர்கொண்டது.ஒரு திசையில் கஸ்டம்ஸ் அணி, 'பார்வர்ட்' திசையில் முன்னேறினாலும், போலீஸ் அணியின் தடுப்பாட்டம் வலுவாக இருந்ததால், கோல் போடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.போலீஸ் அணியின் கோல் கீப்பர் கமலா பிரியன் சிறப்பான தடுத்து விளையாடியதால், எதிரணியின் பந்து கோல் போஸ்டை நெருங்கவில்லை.இரு அணியும் சிறப்பாக விளையாடியதால், இருவரும் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. லீக் போட்டி என்பதால், 'பெனால்டி ஷூட் அவுட்' நடைபெறவில்லை. ஆகவே, போட்டி 0 - 0 என, டிராவில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை