உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மக்கள் குறைதீர் முகாமில் மனுக்களை பெற்ற போலீசார்

மக்கள் குறைதீர் முகாமில் மனுக்களை பெற்ற போலீசார்

மேற்கு மாம்பலம்கமிஷனர் அலுவலகம், தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய போலீசார், மக்களிடம் குறைதீர் மனுக்களை பெற்றனர். தி.நகர் காவல் மாவட்ட போலீசார் சார்பில், மெகா மக்கள் குறைதீர் முகாம், மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம் தலைமையில் நடந்த முகாமில், கோடம்பாக்கம், அசோக் நகர், கே.கே., நகர், எம்.ஜி.ஆர்., நகர், மாம்பலம் உள்ளிட்ட காவல் நிலைய போலீசார் பங்கேற்று, அப்பகுதிமக்களிடம் குறைகளை கேட்டனர். புகார்தாரர் மற்றும் எதிர் புகார்தாரர் வரவழைக்கப்பட்டு, துணை கமிஷனர் முன்னிலையில் வழக்கு குறித்து விசாரித்து தீர்வு காணப்பட்டது. கொடுக்கல், வாங்கல், குடும்ப பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 23 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதேபோல், கமிஷனர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் கமிஷனர் அருண் 20 பேரிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !