ரூ.2,000 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் சிக்கினார்
சென்னை: மதுபோதையில் டூ - வீலர் ஓட்டி சிக்கியவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ்காரரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி போக்குவரத்து போலீஸ்காரர் அழகுராஜா, மதுபோதையில் டூ - வீலர் ஓட்டி பிடிபட்டவரிடம் அபராதம் வசூலித்த பின், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யாமல்இருக்க 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, நே ற்று மதியம் போலீஸ்காரரிடம் பணம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அழகுராஜாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.