உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெருநாய் கடித்து குதறியதில் போலீஸ்காரரின் மனைவி காயம்

தெருநாய் கடித்து குதறியதில் போலீஸ்காரரின் மனைவி காயம்

கீழ்ப்பாக்கம்: போலீஸ் குடியிருப்பில், தெருநாய் கடித்து குதறியதில் போலீஸ்காரர் மனைவி காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சங்கர், 45; பெரியமேடு காவல் நிலைய தலைமை காவலர். இவரது மனைவி ரம்யா, 40. நேற்று முன்தினம், ரம்யா அவரது குடியிருப்பின் அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று, ரம்யாவை துரத்தி, அவரை இடது காலில் கடித்து குதறியது. தொடை பகுதியில் காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே, இதே போலீஸ் குடியிருப்பில் நாய்களை அடித்து கொல்லும் சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண்ணை நாய் கடித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ