உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அய்யப்பன் கோவிலில் மூலஸ்தான கூரை, படி அமைக்க பூஜை

அய்யப்பன் கோவிலில் மூலஸ்தான கூரை, படி அமைக்க பூஜை

மடிப்பாக்கம், சென்னை, மடிப்பாக்கத்தில், 18 படிகள் கொண்ட அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தை தந்திரி குடும்பத்தார் பிரதிஷ்டை செய்ததால், உத்தர சபரிகிரீஸம் என அழைக்கப்படுகிறது.சபரி மலைக்கு செல்ல முடியாத அய்யப்ப பக்தர்கள், விரதம் இருந்து இருமுடி கட்டி, இக்கோவிலில் உள்ள,18 ம் படியேறி அய்யப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது வழக்கம். இக்கோவிலை புனரமைக்க நராயணனன் நம்பூதிரி என்பவரால், 2022ம் ஆண்டு அஷ்ட மங்கல தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, கடந்தாண்டு மார்ச்சில் அய்யப்பன் கோவில் பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, பழைய கோவில் முழுதும் அகற்றப்பட்டு, புதிய கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் ஏப்., 11 ல், அய்யப்பன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளன. இந்நிலையில், அய்யப்பன் மூல சன்னிதானத்தில் பாரம்பரிய முறையில், மரத்தாலான மேல் கூரை, நிர்மாணிக்கவுள்ள 18 படியின் முதல் படிக்கான பூஜை நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ