உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தபால் நிலையம் முற்றுகை தொழிற்சங்கத்தினர் கைது

 தபால் நிலையம் முற்றுகை தொழிற்சங்கத்தினர் கைது

கிண்டி: கிண்டி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை, போலீசார் கைது செய்தனர். தொழிலாளர் நலன் சார்ந்த நான்கு சட்ட தொகுப்பை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர், நேற்று கிண்டி தபால் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யூ., மாநில பொது செயலர் கண்ணன் தலைமையில், தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர். பின், அவர்களை கைது செய்த போலீசார், வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் அடைத்தனர். இதில், 30 பெண்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் கூறியதாவது: மத்திய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. எட்டு மணி நேர வேலையை உயர்த்தும் முயற்சியை கைவிட வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி