உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஞ்சல் காப்பீடு முகவர் நேர்காணல்

அஞ்சல் காப்பீடு முகவர் நேர்காணல்

சென்னை: அஞ்சல் வடக்கு கோட்டத்தில், ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நாளை நடக்க உள்ளது. இந்திய அஞ்சல் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்ல முகவர்களை தேர்வு செய்யும் நேர்காணல், நாளை மாலை 3:00 மணிக்கு, அண்ணா நகர் டவர், மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள துணை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தகுதியாக, 18 வயதிற்கு மேல் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நேர்காணலில் பங்கேற்க விரும்புவோர், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது, முகவரி மற்றும் கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் இரண்டு நகல்களை நேர்காணலுக்கு எடுத்து வர வேண்டும். மேலும் தகவல்களுக்கு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை, 044 - -2827 3635 / 89259 42925 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ