உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் இணைப்பு துண்டிப்பால் ரயில் சேவையில் பாதிப்பு

மின் இணைப்பு துண்டிப்பால் ரயில் சேவையில் பாதிப்பு

குரோம்பேட்டை:தாம்பரத்தில் இருந்து, சென்னை கடற்கரைக்கு, நேற்று மாலை மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.குரோம்பேட்டை ரயில் நிலையத்தில், பயணியரை ஏற்றி புறப்பட்ட போது, இன்ஜின் அருகில் உள்ள பெட்டியின் மேற்பகுதியில் புகை வந்தது.இதை பார்த்து பயணியர் அலறினர். ரயிலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அங்கேயே நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து, புகை வந்த பகுதியில் கண்காணித்தனர்.மின்சார வடத்தில் உராய்வு ஏற்பட்டு புகை வந்ததால், ரயிலுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. ஊழியர்கள் சீரமைத்த பின், ரயிலுக்கு மின் இணைப்பு கிடைத்து புறப்பட்டது.இதன் காரணமாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ