உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை புறநகரில் தொடரும் மின் தடை 

சென்னை புறநகரில் தொடரும் மின் தடை 

சென்னை :சென்னை இ.சி.ஆர்., சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், சேரன் நகர், வெட்டுவான்கேணி, லிங் ரோடு, அனுமான் காலனி, செல்வா நகர் விரிவு, பிரார்த்தனா அவென்யூ முதல் தெரு, இரண்டாவது தெரு, ராயல் என்கிளவ் உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தினமும் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அதிகாலை வரை மின் தடை நீடிப்பதால், மக்கள் துாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்த பகுதியில் உள்ள மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், மின் தடை ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு மின் வாரிய உயரதிகாரிகளுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ