உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துணைமின் நிலையத்தில் பழுது குரோம்பேட்டையில் மின் தடை

துணைமின் நிலையத்தில் பழுது குரோம்பேட்டையில் மின் தடை

குரோம்பேட்டை, குரோம்பேட்டை துர்கா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின் தடை ஏற்பட்டது.திடீரென அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். முதியோர், குழந்தைகள் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், குடும்பம் குடும்பமாக சாலையில் அமர்ந்திருந்தனர்.உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள முயன்ற போதும், சரியான பதில் கிடைக்கவில்லை.பின், இரண்டரை மணி நேரம் கழித்து, இரவு 9:40 மணிக்கு மின் சப்ளை மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின், மக்கள் வீடுகளுக்கு சென்றனர்.இதுகுறித்து, மக்கள் விழிப்புணர்வு மையத்தை சேர்ந்த வி.சந்தானம், 86, கூறியதாவது:தாம்பரம், பல்லாவரம் மின் கோட்டங்களில் உள்ள ஒரு துணைமின் நிலையத்தை கூட பராமரிக்கவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் பராமரிக்க முடியவில்லை என, மின் வாரிய அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.அதனால், பருவ மழையின் போது, இன்னும் எவ்வளவு பிரச்னை வருமோ என்பது தெரியவில்லை. இவ்விஷயத்தில், உயர் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ