மேலும் செய்திகள்
வாடிக்கையாளர் நகைகளுடன் கடை உரிமையாளர் ஓட்டம்
11-Sep-2025
பூந்தமல்லி,கோவிலில் மூதாட்டி தவற விட்ட நகையை கண்டெடுத்து, காவல் நி லையத்தில் ஒப்படைத்த நபரை, போலீசார் பாராட்டினர். மாங்காடை அடுத்த மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணன், 56. பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு, நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போ து, கோவில் வாசலில் தங்க செயின் ஒன்று கிடந்ததை பார்த்தார். அதை எடுத்து பார்த்த போது, ஏழு சவரன் மதிப்புள்ள செயின் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த செயினை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகையை பெற்றுக்கொண்ட போலீசார், தவறவிட்டது யார் என்பது குறித்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று காலை, பூந்தமல்லியை சேர்ந்த ராஜேஸ்வரி, 70, என்பவர், கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது, நகையை தவறவிட்டதாக கூறி புகார் கொடுக்க வந்தார். மேலும், தான் அணிந்திருந்த நகையின் மாதிரியையும் காண்பித்தார். பின், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நகையை பார்த்த போது, மூதாட்டி தவறவிட்ட நகை என்பது தெரியவந்தது. இதையடுத்து, நகையை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த நாராயணனை வரவைத்து, அவரது கையாலேயே ராஜேஸ்வரியிடம், போலீசார் நகையை ஒப்படைத்தனர்.
11-Sep-2025