உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புற்றுநோயால் கைதி மரணம்

புற்றுநோயால் கைதி மரணம்

புழல், செங்கல்பட்டைச் சேர்ந்தவர் பாலாஜி, 45. கொலை வழக்கு ஒன்றில், 2022ல் கிளாம்பாக்கம் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த பாலாஜிக்கு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள், இரண்டு மாதங்களுக்கு முன், பாலாஜியை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பாலாஜி, நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ