| ADDED : டிச 07, 2025 05:30 AM
வில்லிவாக்கம்: பாடி மேம்பாலத்தில், வில்லிவாக்கம் நோக்கி செல்லும் பாதையில், கிழிந்து தொங்கும் தனியார் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். பாடி மேம்பாலம் வில்லிவாக்கம், கொரட்டூர் மற்றும் அண்ணா நகரை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்து வில்லிவாக்கம் நோக்கி செல்லும் மைய பகுதியில் வைக்கப்பட்டுள்ள ராட்சத தனியார் விளம்பர பேனர்கள், 'டிட்வா' புயல் மழையால் கிழிந்து தொங்குகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'தொடர் காற்று மழையால் தனியார் விளம்பர பேனர் கிழிந்து, விபத்து அபாயத்தில் தொங்குகிறது. அடுத்த மழைக்கு பலத்த காற்றடித்தால், பேனர் முழுதுமாக கிழிந்து, வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து பேனரை அகற்றவேண்டும்' என்றனர்.