உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி

அயப்பாக்கம்:அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 42; தனியார் நிறுவன ஊழியர்.இவர், இருசக்கர வாகனத்தில், அயப்பாக்கம் - அம்பத்துார் சாலையில், நேற்று காலை 6:45 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, முன்னால் சென்ற குடிநீர் லாரியை முந்த முயன்று, வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார்.ஆவடி போக்குவரத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றினர்; லாரி ஓட்டுனர் சாமிநாதன், 26, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி