உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வன உயிரின வார விழாவில் மாணவ - மாணவியருக்கு பரிசு

வன உயிரின வார விழாவில் மாணவ - மாணவியருக்கு பரிசு

சென்னை, ''பொருளாதார முன்னேற்றம், கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்போது, வனங்கள் பாதிக்காத வகையிலான வளர்ச்சி இருப்பது அவசியம்,'' என, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார். வன உயிரின வார விழா, கிண்டி சிறுவர் பூங்காவில், நேற்று நடந்தது. இதில், வினாடி - வினா, ஓவியம் மற்றும் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை வழங்கி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி பேசியதாவது: வன விலங்குகளை பாதுகாப்பது, மோதல்களை தடுப்பது மிகவும் சவாலான பணி. வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து, முன்பைவிட மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெரியவர்களைவிட, மாணவ - மாணவியரிடம் எளிதில் கொண்டு செல்ல முடிகிறது. அது காலத்திற்கும் பயன் அளிக்கும். பொருளாதார முன்னேற்றம், கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்போது, வனங்கள் பாதிக்காத வகையிலான வளர்ச்சி இருப்பது அவசியம். போட்டிகளில் பங்கேற்ற, 72,000 பேரையும், வன பாதுகாப்பு துாதுவர்களாக கருதுகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வண்டலுார் பூங்கா இயக்குநர் ரிட்டோ சிரியாக், தலைமை வன விலங்கு காப்பாளர் ராகேஷ்குமார் ரோக்ரா, கூடுதல் தலைமை வன பாதுகாவலர் வேணுபிரசாத், சென்னை மாவட்ட வன பாதுகாவலர் மனீஷ்மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை