மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் யாருக்கு 'சீட்?'
17-Feb-2026
சென்னை: புரோ நியூட்ரோ மேக்ஸ் நிறுவனம், 'புரோ நியூட்ரோ கிட்ஸ், அனி' ஆகிய, இரண்டு புதிய தயாரிப்புகளை நேற்று அறிமுகம் செய்தது. 'புரோ நியூட்ரோ மேக்ஸ்' நிறுவனம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் நோக்கில், 'புரோ நியூட்ரா கிட்ஸ்' என்ற சத்து மாவை அறிமுகம் செய்துள்ளது. அவை, 'கிளாசிக் வெண்ணிலா' மற்றும் 'ரிச் சாக்லேட்' சுவைகளில் கிடைக்கின்றன. அதேபோல, பாரம்பரிய மசாலாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'அனி' என்ற பெயரில் பாரம்பரிய மசாலா பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றில் இட்லி பொடி, ரசம், சாம்பார், புளியோதரை உள்ளிட்ட தயாரிப்புகள் அடங்கும். இது குறித்து, அந் நிறுவனத்தின் நிறுவனர் லதா துபே கூறியதாவது: நவீன வாழ்க்கை மிக வேகமாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் மாறி விட்டது. இன்றைய தலைமுறை பெற்றோர், தங்கள் குழந்தைகளின் நெருக்கடியான கல்விச் சூழலுக்கு மத்தியில், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கும், அதே வேளையில் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சவாலை புரிந்து கொண்டு, புரோ நியூட்ரோ மேக்ஸ் நிறுவனம் அறிவியல் ரீதியான ஊட்டச்சத்தையும், காலத்தால் சோதிக்கப்பட்ட சுவைகளையும் 'புரோ நியூட்ரா கிட்ஸ்' மற்றும் அனி ஆகிய, இரண்டு தனித்துவமான பிராண்டுகளின் கீழ் ஒன்றிணைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
17-Feb-2026