உறவினர் பெண்ணை தாக்கியவருக்கு காப்பு
அம்பத்துார், அம்பத்துார், மாதனாங்குப்பம், ஆண்டாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 45. இவரது மனைவி நீலவேணி, 40. வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார்.இவர்களது உறவினர், பரந்தாமன், 56, என்பவர், எதிர்வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இருதரப்புக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.இதனிடையே, நேற்று காலை 10:00 மணியளவில், கடையில் இருந்த நீலவேணியை உறவினரான பரந்தாமன் கிண்டல் செய்ததாக தெரிகிறது. மனமுடைந்த நீலவேணி, பரந்தாமனை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த, கொம்பை எடுத்து, நீலவேணியை தாக்கியுள்ளார். இதில், அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள், நீலவேணியை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரித்த கொரட்டூர் போலீசார், பரந்தாமனை நேற்று கைது செய்தனர்.