உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் சப்ளையரின் கூட்டாளிக்கு காப்பு

போதை பொருள் சப்ளையரின் கூட்டாளிக்கு காப்பு

அரும்பாக்கம், அரும்பாக்கம் பகுதியில், மெத்தாம்பெட்டமைன் போதை பொருள் விற்ற வழக்கில் கொடுங்கையூரைச் சேர்ந்த தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில், இவர்கள் உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை போலவே ஆந்திரா, ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், 45, என்பவர் போதை பொருள் 'சப்ளையர்' என தெரிந்தது. இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் கடந்த வாரம், வாடிக்கையாளர் போல பேசி, விஸ்வநாதனை சென்னைக்கு அழைத்து, மாதவரத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர்.விஸ்வநாதனை சுற்றி வளைக்கும் போது, அவருடன் இருந்த கூட்டாளி ஒருவர் தப்பினார். அவர் குறித்து விசாரித்ததில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மஸ்தான் எனும் மதன், 45, என தெரிந்தது. இவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ