உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிறுவனத்தில் கையாடல் ஊழியருக்கு காப்பு

நிறுவனத்தில் கையாடல் ஊழியருக்கு காப்பு

சென்னை, மயிலாப்பூர், முசிறி சுப்ரமணியன் சாலையில் உள்ள ஆட்டோ மொபைல் ஷோரூமில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் கவுரிசங்கர், 42. இவர், சில தினங்களுக்கு முன் வரவு - செலவு கணக்குகளை சரிபார்த்தபோது, விற்பனை பிரதிநிதி லட்சுமிகாந்த் என்பவர், 2.23 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது.இது குறித்த புகாரின்படி மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதி லட்சுமிகாந்த், 28, பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 3,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ